Breaking
Sat. Dec 6th, 2025

கிண்ணியாவில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்களை  மீள்குடியேற்ற செயலணியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலா 50000 ரூபா  பெறுமதியான சுமார் 20 கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன .10 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை ஆரம்ப கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன தொடர்ந்தும் அடுத்தடுத்த கட்டங்களில் ஏனைய கழகங்களுக்கும் வழங்கவுள்ளதாக பிரத்தியேகச் செயலாளர் இதன் போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் போன்றோர்கள் உடனிருந்து வழங்கி வைத்தார்கள்.

Related Post