Breaking
Mon. Dec 15th, 2025

பாவனையாளர்கள் நீர்வளத்தின் பாவனையில் வியத்தகு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிடில் 2030-ம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 40-சதவிகித தண்ணீர் பற்றாக்குறையினால் துன்புற வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்துடன் மழைவீழ்ச்சி படிவங்கள் ஒழுங்கு முறையற்றதாக காணக்கூடியதாக இருப்பதால் நிலத்தடி நீர் இருப்புக்கள் ஏற்கனவே குறைந்து கொண்டு செல்கின்றன.

2050 அளவில் உலகத்தின் சனத்தொகை 9-பில்லியன்களாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதும், விவசாயம், தொழில் மற்றும் தனிப்பட்ட நுகர்வு போன்ற தேவைகளிற்கு அதிக நிலத்தடிநீர் பாவிக்கப்படுவதும் குறிப்பிட்ட பற்றாக்குறை ஏற்பட காரணங்களாக அமையும் எனவும் கருதப்படுகின்றது.

இந்த அறிக்கை  வெள்ளிக்கிழமை ஐ.நா.சபையினால் இந்தியாவில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய போக்குகளில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் 2030-ல் தண்ணீர் தேவையின் 60-சதவிகிதம் மட்டுமே கிடைக்க கூடியதாக இருக்கும் எனவும் தேவை மேலும் அதிகரித்து 2050-ல் 55-சதவிகிதமான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய கூடிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பயிர்களின் வளர்ச்சி செயலிழத்தல், தொழில்கள் வீழ்ச்சியடைதல், சுற்றுச்சூழல் அமைப்புகள் நிலைகுலைதல் போன்றன ஏற்படுவதற்கு இந்த பற்றாக்குறை காரணமாக அமையும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தண்ணீர் உரிமைகள் மீது வன்முறைகளையும் தூண்டிவிட வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post