Breaking
Sun. Dec 7th, 2025

பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.09 மணியான சுபமுகூர்த்த நேரத்தில் ஆரம்பித்துவைத்தார்.

வரும் வழியில் கொடிகாமம், நாவற்குழி ஆகிய ரயில் நிலையங்களையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். 24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி யாழ்ப்பாணத்தை இன்று வந்தடைந்தது.

வழிநெடுக்கம் மக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் யாழ்தேவியை வரவேற்றனர். அத்துடன் ரயிலிலும் பலநூற்றுக்கணக்கானவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணித்தார். இன்று முற்பகல் 11.20 மணிக்கு யாழ்.பிரதான ரயில் நிலையத்தை யாழ்.தேவி வந்தடைந்தது. அங்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் குழுவுக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து யாழ்.பிரதான ரயில் நிலையத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்.

Related Post