மன்னார் மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  மன்னாரில் இன்று (04) தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்,  வட மாகாணசபை உறுப்பினர் அலிகான் ஷரீப், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட எராளமான பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.