கொதடுவை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா!

வெல்லம்பிட்டிய, கொதடுவை தாருல் நாபீஹா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை (21) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார். 

(ன)