Breaking
Sun. Dec 14th, 2025

க.கிஷாந்தன்

நோர்வூட் – போற்றி தோட்டத்தில் 4 வயது சிறுமி ஒருவரை தாய் அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மேற்படி தாயினால் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறித்த சிறுமியின் தாத்தா தெரிவித்துள்ளார்.

அதன்பின் நோர்வூட் பொலிஸாருக்கு சிறுமியின் தாத்தா செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுறுத்தல் வழங்கியதாக நோர்வ+ட் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை கொழும்பில் பணிபுரிவதாகவும் தாய் தோட்ட தொழிலாளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரமேஷ் ராஜா சௌமியா (4 வயது) என்ற இந்த சிறுமி வீட்டில் குழப்பம் செய்வதன் காரணமாக இவ்வாறு தாய் அடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த தாய் நேற்று சிறுமியை தாக்கியதில் பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தாயை ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

vk

Related Post