9 பேர் இஸ்லாத்தை தழுவினர் ! (படங்கள் இணைப்பு)

– அப்துல் ஹமீது ஸாலிஹ் –

இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் நேற்று  முன்தினம்  (22.06.15) இஃப்தார் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து அல்மனா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகை நடைபெற்றது.

அதன்பிறகு, பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 9 கிறித்தவ சகோதரர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் அனைவரும் கலிமா ஷஹாதாவை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்றனர்.

மக்ரிப் தொழுகைக்கு வந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு சலாம் சொல்லி ஆரத்தழுவி கட்டியணைத்து மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவம் அங்கே அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

சத்தியத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த சகோதரர்கள் மீது இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக…!

q2 2 q1