சவூதியில் 9 மாதங்களில் 5.5 இலட்சம் பேர் நாடு கடத்தல்

சவுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 32500 பேர் மீது பல்வேறுபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இவர்கள் சட்டத்திற்கு புறம்பான சவுதியில் நுழைய உதவியவர்கள், sponsor ஐ விட்டு வெளியே வந்து வேலை பார்த்தவர்கள் ,visa காலாவதி அகியும் நாட்டுக்கு செல்லாமல் மற்றும் visa புதிப்பித்தல் செய்யாதது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவர்கள். இதை தவிர 280 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இது வரை 30 லச்சம் திறஹம் பிழை வசூலிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிறை தண்டனைக்கு பிறகு நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இதில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.