நீதிமன்றுக்கு துப்பாக்கியுடன் நுழைவு

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிக்கு அனுமதிப் பத்தரம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் சந்தேகநபர் ஏன் துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை அண்மையில் ஹல்ஸ்டப் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.