Breaking
Fri. Dec 5th, 2025

மராட்டிய மாநிலம் ரத்னகிரி அருகே உள்ள திசாங்கி கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

நேற்று காலை அந்த கிராமத்தின் மைதானப் பகுதியில் வெடிக்காத பட்டாசுகளை சிலர் போட்டு விட்டு சென்றிருந்தனர்.

நேற்று மதியம் அந்த மைதானத்தில் சிறுவர்– சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தாமினி என்ற 5 வயது சிறுமி வெடிக்காமல் வீசப்பட்டு கிடந்த பட்டாசுகளை பார்த்தாள்.

அந்த பட்டாசு பார்சல் அவளுக்கு சாக்லேட் மாதிரி தெரிந்துள்ளது. யாரிடமும் சொல்லாமல் அவள் மூன்று பட்டாசுகளை எடுத்து தின்று விட்டாள்.

சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். உடனடியாக அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவள் உயிரிழந்தாள். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேட் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

By

Related Post