Breaking
Fri. Dec 5th, 2025

இந்தியா தமிழக தலைநகர் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தனது டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் – மைத்ரி” என தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் இதுவரையில் 269 பேர் உயிரிழந்ததுடன் இலட்சக் கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் 60,000 மக்கள் மீட்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post