மாணவன் தாக்கியதில் ஆசிரியர் வைத்தியசாலையில்!

காலி பிரதேச பாடசாலையொன்றில் இந்தத் தாக்குதல் சம்பவம் இன்று (11) முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

காலி பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலினைத் தொடர்ந்து படுகாயமடைந்த ஆசிரியர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே மாணவர் அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பிலான விசாரணைகளை அக்மீமன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.