‘சிங்க லே’அமைப்பைத் தடை செய்யுமாறு கோரிக்கை

‘சிங்க லே’ அமைப்பினை தடை செய்யுமாறு அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் உடனான சந்திப்பின் போதே சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘சிங்க லே’ , ‘தமிழே’ அல்லது ‘முஸ்லிம் லே’ போன்ற எந்தவொரு இனவாத அமைப்புக்களும் அவசியமில்லை.
71ஆம் மற்றும் 81ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு இரத்த ஆறுகள் ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக போர் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இனியும் போர் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுதொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதோடு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையினை தோற்றுவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘சிங்க லே’ அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.