சிங்களவர்களிடமே மத்திய அரசின் பலம்: வாசு

இலங்கையில் “மத்திய அரசின்” பலம் சிங்களவர்களான பெரும்பான்மை இனத்திடம் உள்ளது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நிராகரிக்க முடியாது என  மஹிந்த அணி ஆதரவு எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 ஒற்றையாட்சிக்குள் நாடு பிளவுபடும் என்ற கூட்டமைப்பின் “வாதத்தை” ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.