மே மாதத்திலும் அனல் பறக்கும் வெப்பம்!

இலங்கை மக்கள் எதிர்வரும் மே மாதத்திலும் அதிகளவு வெப்பத்துடன் கூடிய காலநிலையை அனுபவிக்க நேரிடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதம் இறுதி வரையில் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.