பொது எதிரணியினர் ஐ.நா. முன் ஆர்ப்பாட்டம்

பொது எதிரணியினர்  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா சபை முன்  இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் பொது எதிரணியினர்  குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் பாராளுமன்றத்தில்  தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக  பொது எதிராணியினர்  ஜெனீவாவில் வைத்து தெரிவித்துள்ளனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, உதயகம்மன்பில மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.