23 வயது இளைஞரை கடத்திய 25 வயதான யுவதி கைது!

23 வயதான இளைஞர் ஒருவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள பலவந்தப்படுத்தியகுற்றச்சாட்டின் பேரில் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார்.

இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார்விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்