கட­லுக்கு சென்ற மீன­வர்கள் இருவர் 20 நாட்­க­ளா­கியும் வீடு­ சே­ர­வில்லை

திரு­கோ­ண­மலை மாவட்டம் திருக்­க­டலூர் மற்றும் பள்­ளத்­தோட்டம் பகு­தி­களைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கட­லுக்குச் சென்ற நிலையில் இன்­றுடன் 20 நாட்­க­ளா­கியும் தமது வீடு­க­ளுக்கு வந்து சேர­வில்லை. இவர்கள் கட­லுக்குச் சென்ற பட­­கினை கடலில் கண்டு மீட்ட போதும் இவர்­களின் தகவல் தெரி­யாத நிலையில் பெற்றோர் தேடி வருகின்றனர்.