தடைப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த அனைத்து ரயில் சேவைகளும் தற்போது சீரான நிலைமைக்கு திரும்பியுள்ளதாக, ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

தபுத்கேம பிரதேசத்தைச்சேர்ந்த அனுராதபுர ரயில் மார்க்கமானது நேற்று பெய்த மழையினால் நீரில் மூழ்கியது இதனால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

இதேவேளை, மலையக ரயில் மார்க்கத்தில் சில இடங்கள் கீழ் இறங்கி காணப்பட்ட போதிலும் அதனை சீராக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர் தெரிவித்தார்.