Breaking
Sat. May 18th, 2024

“ஊவாவில் தோற்றது முஸ்லிம்களே, முஸ்லிம் கூட்டமைப்பல்ல” என்ற  கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பாக,
உண்மைதான், நீங்கள் சொல்வது போல முஸ்லிம் கூட்டமைப்பு தோற்கவில்லை ஏனெனில் அரசாங்கத்தின் தேவைப்படி ஐ.தே.கட்சி சார்பில் ஒரு முஸ்லிம் உறுப்பினரையும் வெற்றி பெற விட்டுவிடக் கூடாது என்பதை மறைமுகமாக வைத்து களமிறக்கப்பட்ட உங்கள் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதும் ஊவா முஸ்லிம்கள் கடந்த முறைபோல இம்முறையும் பிரதிநிதித்துவம் இன்றி தோற்றுவிட்டார்கள் என்பதும் வெறுப்பூட்டும் ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரும் உண்மை.

ஊவா மக்கள் மர்ஹூம் அஷ்ரப் அவர்களில் வைத்த நம்பிக்கையிலும் , நன்றிக்கடனாகவும் எப்போதும் ஐயாயிரத்துக்கு அண்மித்த தொகை வாக்கினை அளித்துக் கொண்டேயிருப்பார்கள், வெற்றிபெற முடியாது என்று தெரிந்தாலும் தனித்துவத்தைக்காட்ட வாக்களிப்பவர்கள்,

ஆனால் பிரதிநிதித்துவம்தான் முக்கியம் என முஸ்லிம் காங்கிரஸ் விரும்பியிருந்தால் இத்தேர்தலில் போட்டியிடாமல் பிரதிநிதித்துவம் பெற முயற்சி செய்யுங்கள் என ஒரு சமிக்ஞை கொடுத்திருந்தால் போதும் வீணாய்ப்போன இந்த 5045 வாக்குகளும், அளிப்பதால் பிரயோசனம் இல்லை என்பதால் யாருக்கும் அளிக்காத சுமார் 2000 வாக்குகளும் ஐ.தே.கட்சி முஸ்லிம் வேட்பாளர்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டு சுமார் 22000 விருப்பு வாக்குகளுடன் இருவரும் வெற்றி பெற்றிருப்பார்களே.

இது தலைவருக்குத் தெரியாததல்ல, ஆனால் இதையெல்லாம் மறைத்து மிக மென்மையான பதுளை முஸ்லி்களை இப்படி ஏமாற்றி விட்டு நீங்கள் தோற்கவில்லை மக்கள்தான் தோற்றவர்கள் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா, எப்படி இதற்குப்பிறகும் மக்களின் உரிமைக்காக நீங்கள் பேசுவது, எல்லாவற்றையும் வல்ல அல்லாஹ் பார்ப்பவனாகவும், கவனிப்பவனாகவும் இருக்கிறான்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *