Breaking
Fri. Dec 5th, 2025

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைதிரிபால சிறிசேன தலைமையில், நேற்று திங்கட்கிழமை அவசரமாக கூடிய, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அமைவாக, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுமாறு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸாந்த டி.சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில், அடிப்படை விசாரணை  இராணுவ நீதிமன்றம் நிறுவப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் அறிவித்துள்ளது.

By

Related Post