நாட்டில் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்

நாடுமுழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணம், மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதி மற்றும் மேற்கு, தெற்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களில் தொடர் மழைப்பெய்ய வாய்ப்புள்ளதெனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.