Breaking
Fri. Dec 5th, 2025

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அந்த அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்கலாமா அல்லது அமைப்பிலிருந்து விலகிவிடலாமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இதில் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 41.9 சதவீதத்தினரும், எதிராக 51.9 சதவீதத்தினரும் வாக்களித்தனர்.

இதனால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார்.

இதன்படி நாளை (13) தான் பதவி விலகப் போவதாக டேவிட் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து ஆண்ட்ரியா லீட்சும் விலகியதை அடுத்து, கன்சர்வேடிவ் சார்பாக தெரேசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

By

Related Post