Breaking
Sun. Dec 7th, 2025

பேஸ் புக்  ஊடாக 18 வயது யுவதியை காதலித்து ஏமாற்றிய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமாகி தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிய பிக்குக்கு    எதிராக குறித்த யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரான பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்னர்.இதன்போது எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளார்.பௌத்த பிக்கு குறித்த யுவதியிடம் தம்மை சாதாரண ஓர் இளைஞராக காண்பித்துக் கொண்டுள்ள காரணத்துக்காக  இவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாத்தளை வில்கமுவ என்னும் இடத்தைச் சேர்ந்த சமன் புஸ்பகுமார என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.-

Related Post