தன்னுயிரை நீத்து 300 பேரின் உயிரைக் காப்பாற்றிய இஸா முஹம்மத்

திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹம்மத் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு  சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.  இச்சம்பவம் நேற்று (3) இடம்பெற்றது.

36D55F1600000578-3721366-image-a-100_1470222126245