Breaking
Fri. Dec 5th, 2025

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் பாலைவன பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. அவை தவிர மற்ற வளங்கள் இல்லை. வனப் பகுதிகள் கிடையாது.

எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அதில் மழைக்காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல் குளம், மூடுபனி போன்றவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஓட்டலுடன், குடியிருப்புகளும் அதில் கட்டப்பட உள்ளன.

இந்த அதி நவீன ஓட்டல் ரூ. 2300 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்படும் ஓட்டல் 5 நட்சத்திர அந்தஸ்து கொண்டது.

75 ஆயிரம் சதுர அடி கொண்ட ஓட்டலை உலக புகழ்பெற்ற ஹில்டன் பிராண்டு குயுரியோ நிறுவனம் நடத்த உள்ளது. அதில் அமைக்கப்படும் மழைக்காடு பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் வருகிற 2018-ம் ஆண்டு திறக்கப்பட உள்ளது.

By

Related Post