Breaking
Mon. Dec 8th, 2025
உலகின் பல பகுதிகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது,
 உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும், முஸ்லிம் சகோதரர்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் உதவுவதோடு, பசியை போக்கி, ஏழ்மையை அகற்றும் திருநாளாக அமையும் இந்த பண்டிகையை முஸ்லிம் சகோதரர்கள் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாட வேண்டும். அமெரிக்க மக்களின் சார்பில், அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஒபாமா தெரிவித்துள்ளார்.

Related Post