Breaking
Sun. Dec 7th, 2025

ஏ.எஸ்.எம்.ஜாவித்

இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு ராஜ்ஜிய தூதரகத்தின்   புதிய வீசா நிலையம் கொழும்பு-03, ரீட் அவனியு, இல. 112 இல் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல்.பிரீஸினால் உத்தியோக பூர்வமாக நேற்று (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல்-முல்லா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர்களான றவுப் ஹக்கீம், அதாவுட செனிவிரத்ன, டிலான் பெரோ, ஐக்கிய அரபு இராட்சியத்தின் (யு.ஏ.இ) வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் முஹமட் மீர் அப்துல் அல் ரயிசி, தூதரக அதிகாரிகள், உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Post