Breaking
Sat. Dec 6th, 2025
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் எனத் தெரிந்து கொண்டே சிலர் பொய்யாக பிரச்சாரம் செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் ஜனாதிபதி வெற்றியீட்டுவார் என அரசாங்கத்தினால் ஒரம் கட்டப்பட்டுள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் கூறுவது மனச்சாட்சிக்கு இணக்கமாகவல்ல.
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய சாத்தியமில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
சிரேஸ்ட அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள இவ்வாறு ஜனாதிபதிக்கு அமைச்சர்கள் முகஸ்துதி பாடி வருகின்றனர்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.  தனக்கு தேவையான வகையில் சட்டத்தை மாற்றியமைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றியீட்ட முடியாது.
மஹிந்தவிற்கு முடியும் எனத் தெரிவிக்கும் தரப்பினருக்கு வெற்றியீட்ட முடியாது என்பது நன்றாகத் தெரியும் என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Related Post