குருநாகலையில் அமைச்சர் றிஷாத்……

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களின்  குருநாகல் மாவட்ட இணைப்பாளர் ஜனாப் அஸார்தீன் – மொயீனுத்தீன் அவர்களின்  ஏற்பாட்டில் குருநாகல் வெஹெர விளையாட்டு மைதானத்தில், நேற்று (02.10.2016) இடம்பெற்ற  சமூக நல்லிணக்கத்திற்கான ஹஜ் விளையாட்டுப் போட்டி நிகழ்வில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவ்வப்போது அங்கு உரையாற்றிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இயங்கும் இன்றைய அரசாங்கம் இன ஐக்கியத்தின் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி பொருளாதார அபிவிருத்திக்கான முயற்சிகளில்  ஈடுபட்டிருக்கும் நிலையில்; வடக்கின் சில அரசியல்வாதிகள் இனத்துவேசத்தைக் கிளப்பி பிரிவினைகளுக்கு வழிவகுக்கும் வகையில் பேசிவருவது மிகவும் துரதிஷ்டவசமான விடயமாகும் என்று கூறினார்.

“வடகிழக்கை ஒன்றிணைக்க கோஷம் எழுப்புவது நாட்டில் மீண்டுமொரு பதட்டநிலையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர், தமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இந்த நாட்டு முஸ்லிம் மக்களும் வடகிழக்கை இணைப்பதற்கு ஒரு போதும் துணைபோக மாட்டார்கள்” – என்று உறுதிபடக் கூறினார்.

இந்நிலையில், வடகிழக்கு இணைப்பைப் பற்றி முஸ்லிம் காங்கிரஸின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட, தெளிவான உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை அறிய நாட்டு மக்கள் ஆவளோடு இருக்கின்றார்கள்.

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்