Breaking
Sun. Dec 7th, 2025

பழுலுல்லாஹ் பர்ஹான்

வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளித்தார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்றைய தினம் (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவற்றை கையளித்தார்.

இதன் பிரகாரம் வடமாகாணத்தில் 20 ஆயிரம் பேர் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, 2352 பேர் தொலைந்து போன நகைகளையும் மீளப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதீயூதீன், சமூக சேவைகள் அமைச்சர் பிலீக்ஸ் பெரேரா உரையாற்றியதைதயடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றினார்.

வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

Related Post