Breaking
Fri. Dec 5th, 2025

06.12.2016

மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது. திரையுலகில் முன்னோடி நட்சத்திரமாக இருந்த புரட்சி நடிகர் MGR அவர்களின் பாதையில், தமிழ் நாட்டின் புரட்சித் தலைவியாக விளங்கி, தமிழ் நட்டு மக்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட, காலம் சென்ற முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் குரல் கொடுத்த தலைவி என்பதில் ஐயமில்லை.

“அம்மா உணவகங்களை” அமைத்து ஏழை மக்களின் பசியாற்றிய தமிழ்  தலைவியின் மரணம் குறித்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழ்நாட்டு மக்களுடன் நாங்களும் இணைந்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக நீண்டகால முதலைமைச்சராக இருந்து, தமிழ் நாட்டின் சகல துறையினதும் அபிவிருத்திக்கு அயராது உழைத்த இரும்புப் பெண்மணி என்றும் அழைக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டு மக்களின் மனதில் நீங்காத நினைவாக என்றென்றும் இருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

By

Related Post