கனரக வாகன பயிற்சி நெறி முடிந்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி!!!

கனரக வாகன பயிற்சி நெறி முடிந்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 06.03.2017 ஆம் திகதி  அலுத்வலையில் இடம்பெற்றதுIMG-20170306-WA0048
இலங்கை தொழிற்பயிற்சி அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கனகர வாகன பயிற்சி பாடசாலை அலுத்வலையில்  அமைந்துள்ள பயிற்சி நிலையத்தின்  பணிப்பாளர் விதானங்க தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
 மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சிங்கள  தமிழ், முஸ்லிம்  இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்று கொடுக்கும் நோக்கில் தனது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 15 லட்சம்  நிதி  ஒதுக்கீட்டின் மூலம்  இப்பயிற்சி நெற்றி இடம்பெற்றது.
பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள்  சான்றிதழ் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், மற்றும்  அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர். IMG-20170306-WA0054 IMG-20170306-WA0031IMG-20170306-WA0038