Breaking
Sun. Dec 7th, 2025
ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் அரச சேவையாளர்களுக்கான வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோட்டை தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று நாவல பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகவுள்ளது.
உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் அல்லது வீழ்ச்சியடையலாம், ஆனால் தொழில் புரியும் வர்க்கத்தின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Post