நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி  இன்று 18.03.2017 பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இச்சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12  பாடசாலைகள் பங்கு பற்றும் இப்போட்டி  ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானம் மற்றும்  ஓட்டமாவடி  அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பங்கு பற்றிய பாடசாலைகளும் மூன்று பாடசாலைகள் சீருடை அணிந்து வரமையினால் இப்பாடசாலைக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி தனது நிதி மூலம்  சீருடை பெற்று தருவதாக குறிப்பிட்டார்.
நுற்றாண்டு விழாவிற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வருகை தரவுள்ளார் என்று பிரதி அமைச்சர் இந்நிகழ்வில்  உத்தியோக பூர்வமாக  அறிவித்தார்.
இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு  அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்  எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினருடன் இனைந்து செயற்படுவதற்கு அனைவரும் முன்வருமாறு  பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் இஸ்ஸதீன், பிரதி கல்விப் பணிப்பாளர் அஷ்ரப், உதவி திட்டப்பணிப்பாளர் றுவைத்,  ஓய்வு பெற்ற  அதிபர்களான காதர், சலாம் , பாடசாலை பிரதி  அதிபர் ஹபீர் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி மற்றும் பாடசாலை  ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.IMG_1759IMG_1850IMG_1883