சொந்த இடத்துக்கான போராட்டத்தில் ஈடுபடும் முள்ளிக்குள மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும் என கோரி அந்த பிரதேச மக்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, அகில மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (01) சந்தித்து நிலமைகளை கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின் போது முன்னால் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னனியின் தலைவருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் அலிகான் சரீப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்PSX_20170401_174009 PSX_20170401_174046 PSX_20170401_174158 PSX_20170401_174351 PSX_20170401_174423