Breaking
Sat. Dec 6th, 2025
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
“மஹிந்தவிற்கு மூன்றாம் தவணை முடியாது” என்ற தலைப்பில் மாத்தளை சணச அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பிற்கு அமைவாக எந்தவொரு மஹிந்த ராஜபக்சவிற்கும் ஜனாதிபதி தேர்தலை தற்போதைக்கு நடாத்த அவகாசம் கிடையாது. எனக்கு தெரியாது மஹிந்த ராஜபக்சவிற்கு சிங்களம் வாசிக்க தெரியுமா என்று.
தேவையென்றால் நீதிமன்றம் செல்லவும் தயார் அங்கு நான் நியமித்த நீதவான்களே கடமையாற்றுகின்றனர். தற்போதைக்கு ஜனாதிபதி தேர்தல் நடத்தக் கூடாது என்பதனை தெளிவான சட்ட வாதங்களுடனேயே முன்வைக்கின்றோம்.
மிகத் தெளிவான ஓர் அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகின்றோம்.  விரைவில் அந்த அரசியல் அமைப்பிற்கு 19ம் திருத்தச் சட்டம் என பெயரிடப்பட்டவுள்ளது. விரைவில் இந்த உத்தேச சட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதியினால் இப்போதைக்கு தேர்தல் நடாத்த அரசியல் அமைப்பின் பிரகாரம் அனுமதி கிடையாது என சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related Post