Breaking
Sun. Dec 7th, 2025

அரசாங்கத்தின் 10 இலட்சம் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் எமது வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள 10 தையல் பயிற்சி நிலையம் மற்றும் சிறிய ஆடைத்தொழிற்சாலை பற்றிய அறிவூட்டல் நிகழ்வு.
ஒரு நிலையத்திற்கு 20 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு ஆசிரியை, ஒரு காவலாளி மற்றும் மேற்பார்வையாளர் என சுமார் 230 குடும்பங்கள் இதில் நன்மை அடைய உள்ளனர்.
சுமார் 6 மாத காலம் பயிற்சி நிலையமாக இயங்கும் இந்த நிலையம் அதனைத்தொடர்ந்து சிறிய ஆடைத்தொழிற்சாலையாக செயற்பட உள்ளது. GST Plus வரிச் சலுகை தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தருனத்தில் இலங்கைக்கான ஆடை உற்பத்தியின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச ரீதியான கேள்விகளும் அதிகரித்து உள்ளமை குறிப்பிட தக்கது

 

Related Post