.அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் டோக்கியோ வீதியை புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது .

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் டோக்கியோ வீதியை புனரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

 

பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லெத்தீப் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறாவூர் மஸூரா சபை உறுப்பினர்களான தௌபீக், ஷக்கீ, ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.