Breaking
Sun. Dec 7th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மீள்குடியேற்ற துரித செயலணியின் இணைத்தலைவரும்  அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முசலி பிரதேச சபை அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஸாஹிரா பாடசாலைக்கான புதிய கட்டடம் பொற்கேணி கிராமத்திற்கான மைதானம் மற்றும் பொற்கேணி பெரிய ஜும்மா பள்ளிவாசலுக்கான சுற்று மதில் போன்றவை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

மேலும் இந்நிகழ்விற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர், அலிகான் ஷரீப், ஆகியோரும் மற்றும் கிராம மக்களும் கலந்து சிறப்பித்தனர்

இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ” இந்த முசலி பிரதேச சபைக்குட்பட்ட பல கிராமங்கள் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் தூர நோக்கில் உருவாக்கப்பட்டு இன்று பாரிய அபிவிருத்திகளை பெற்று வருகின்றது. அமைச்சரின் இந்த தூர நோக்கின் முக்கிய காரணம் எமது சொந்தங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களின் முழு உரிமையோடு வாழ வேண்டும் என்பதட்காக மாத்திரம்தான் அதைத்தவிர மற்றைய அரசியல் வாதிகள் போன்று அரசியல் இலாபத்திற்காவும் உழைப்பதட்காகவும் அல்ல எனவே மீள்குடியேறிய மக்கள் நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இது உங்கள் கிராமம் என்று ஒரு பற்று உங்கள் மனதில் உருவாக்க வேண்டும் பாடசாலையாக இருந்தாலும் சரி பள்ளி வாசலாக இருந்தாலும் சரி வீதிகளாக இருந்தாலும் சரி வேறு யாரும் இதை பயன்படுத்த போவது இல்லை நீங்களும் உங்கள் பிள்ளைகளும்தான் இவற்றை அனுபவிக்கப்போகின்றார்கள் எனவே எமது கையில் இருக்கும் ஆயுதம் கல்வி மட்டும்தான் அதை நம் குழந்தைகளுக்கு அழகான முறையில் வழங்க வேண்டும் நாளை மறுமையில் இறைவனின் கேள்வி கணக்கிற்கு வாய் அடைத்தவர்களாக நிக்கும் சந்தர்ப்பத்தை நாம் உண்டாக்கி விடக்கூடாது மாணவர்கள் கல்விக்காக நான் என்றும் உங்களோடு இணைந்து பாடுபடுவேன் ” எனவும் தெரிவித்தார்.

Related Post