Breaking
Sun. Dec 7th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்தீன், செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடையுத்தரவு கோரி முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடையுத்தரவை வழங்குவதில்லையென மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு, மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது,

நீதிமன்ற தீர்ப்புக்கமைய செயலாளர் நாயகம் தொடர்ந்தும் தமது கடமைகளை செய்ய எந்த இடையூறும் இனி இருக்காது எனவும் குறிப்பிட்ட அவர், தேர்தல் திணைக்களத்திற்கும் நீதிமன்றத் தீர்ப்பை கட்சி அறிவித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் சுபைர்தீன் ஹாஜியார் அவரது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பார் என்றும் தெரிவித்தார்

ஊடகப்பிரிவு

Related Post