Breaking
Mon. Apr 29th, 2024

நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யவில்லையாயின் இறைவனின் தண்டனையாக நமக்கு ஏமாற்றுக் காரர்கள் தான் தலைவர்களாக வருவார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கம் கடற்புறா மீனவர் அமைப்புக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.அருள்செல்வன் தலைமையில் அமைப்பு கட்டடத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு கட்டமைப்பு இருக்கின்றது. ஆனால் எல்லோருக்கும் மனிதநேயம் ஒன்றுதான். பௌத்தம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மனித நேயம் என்றல்ல, எல்லோருக்கும் மனச்சாட்சி இருக்கிறது, சரி பிழை தெரிகின்றது.

இந்த மனித நேயத்தை புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் நாங்கள் எங்களுக்குள்ளே தமிழர் என்றும், முஸ்லிம் என்றும், சிங்களவர் என்றும் கோடுகளை போட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த காலத்தில் நாங்கள் அப்படி பிரச்சனையோடு தேசியத்திலே இருக்கிற பெரும்பான்மை சமூகத்தோடு சண்டை போட்டு அவர்கள் இப்படிதான் அநியாயம் செய்கின்றார்கள் என்றெல்லாம் சொல்லி கதைகளை கேட்டு நாங்கள் அவர்கள் மீது குரோதத்தை வளர்த்து எங்களுக்குள் எதனையும் சாதிக்கவில்லை.

நீங்கள் சாதிக்கவில்லை, தலைவர்கள் சாதிக்கவும் இல்லை, எங்களாலும் சாதிக்க முடியாமல் போனது ஏனெனில் அடிப்படையிலே இது ஒரு பௌத்த நாடு சிங்களவர் தான் ஜனாதிபதியாக மற்றும் பிரதமராக வருவார்.

இவைகள் புரியவில்லை என்று சொன்னால் நீங்கள் வாக்காளருக்கு தகுதியில்லாவர்கள், படித்தவருக்கு, தீர்மானம் எடுப்பவருக்கு தகுதியில்லாதவர்கள். இதுதான் நான் படித்துக் கொண்ட பாடம்.

கிழக்கு மாகாணத்திலே மற்றவர் வந்தால் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்று சொன்னால் இந்த நாட்டின் பௌத்த ஜனாதிபதி மற்றும் பௌத்த பிரதமரை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்.

இது இந்து நாடா அல்லது முஸ்லிம் நாடா இல்லை இதிலே நம்மிடத்தில் தெளிவில்லை. நம்மிடத்தில் கதை கட்டவிழ்கின்ற பொழுது வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது தமிழனாக இருக்க வேண்டும் என்று அதே படத்தை ஓட்டிக் கொண்டு திரிகின்ற பொழுது எங்களுடைய இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் முறுக்கேறுகின்ற வசங்களை பேசிய காரணத்தினால் நாங்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டு போகின்றோம். நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டு போகின்ற விடயம்.

அரசியல் பரீட்சை ஐந்து தடவைக்கு ஒரு முறை நடக்கும். ஒருவரால் எட்டு தடவைக்கு மேல் எங்களால் வாக்களிக்க முடியாது. இதனை தமிழ் சமூகம் யோசிப்பதில்லை, ஆனால் முஸ்லிம் சமூகம் யோசிக்கின்றது.

பிரச்சனைகள் பல உள்ளன அதை பத்திரிகைகளில் சொல்லிச் சொல்லி புளம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது. பிரச்சனைக்கு என்றோ ஒரு நாள் தீர்வு வரவேண்டும். அது எங்களுடைய நடு உள்ளத்தில் இருக்கின்றது. அதுவரையும் சும்மாக இருந்து விட முடியாது.

மக்களுடைய எதிர்பார்ப்புக்கள், அபிலாசைகள், மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய சமூக ஒற்றுமைகள், இந்த மாவட்டத்திலே இருக்கின்ற தேவையில்லாத அரசியல் கலாச்சாரங்கள் கலையப்பட வேண்டும் என்கின்ற விடயம் இவையெல்லாம் நிறையவே இருந்து கொண்டிருக்கின்றது.

நாங்கள் கண்டுகொல்லாம் இருந்து கொண்டிருக்கின்றோம். கனிசமானவர்கள் இந்த விடயத்தில் கட்டுன்டு போவதன் காரணத்தினால் நல்ல அரசியல் வாதிகளை தேடுவதில் தவறி விடுகின்றோம்.

பிள்ளைகளின் நலனுக்கான நல்ல விடயங்களை தேடி கொடுங்கும் நீங்கள் நல்ல அரசியல் வாதிகளை தேடுவதில்லை. நல்ல அரசியல்வாதிகளை ஏன் நீங்கள் அடையாளம் காணவில்லை. இது நீங்கள் தான் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்யவில்லையாயின் இறைவனின் தண்டனையாக நமக்கு ஏமாற்றுக் காரர்கள் தான் தலைவர்களாக வருவார்கள், கல்குடாத் தொகுதியிலே தேவநாயகம் ஐயா இருந்தார். அவரை தமிழன் என்று பார்க்காமல் முஸ்லிம் பகுதியினர் வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்.

ஒரு உண்மையான அரசியல்வாதிகளுக்கு தமிழன், முஸ்லிம், சிங்களவன் என்ற பேதம் கிடையாது. அவருக்கு எங்கு புள்ளியடி இடுகின்றார்களோ அவர்கள் தான் அவருடைய மக்கள். அது அவனுடைய மூலதனம், அவர்களுக்கு தலை வணங்குவான்.

வேறு இனத்தவர்கள் வாக்களித்தால் அந்த வாக்கை வேணாம் என்று சொல்லவார்களா சொல்ல முடியாது. எங்களால் முடிந்த பங்களிப்பை செய்திருக்கின்றோம் எதிர்காலத்தில் செய்வோம்.

வறுமையை காரணம் காட்டி தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு துரோகம் செய்து விடாதீர்கள். வறுமை எங்கிருக்கின்றதோ அங்கு கல்வி இருக்கும். பிள்ளைக்கு கல்வி வராது என்று பெற்றோர் நினைத்தால் அவர்களை போன்று ஒரு முட்டாள் யாரும் கிடையாது என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *