Breaking
Fri. Dec 5th, 2025

ஹஜ் பெருநாள் தினமான எதிர்வரும் 2ம் திகதி  நடைபெற ஏற்பாடாகியிருந்த உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் துறையின்;  SLIATE ( ஆங்கில பாடநெறி) பாடத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை நடாத்துவதற்கு இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிலாரி டி. சில்வா தெரிவித்தார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு பெருநாள் தினத்தன்று இந்தப்பரீட்சையை நடாத்துவதால் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை எடுத்துரைத்த போது பரீட்சையை பிற்போடுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார்.

(ஊடகப்பிரிவு)

Related Post