பாரளுமன்ற உறுப்பினர் நவவி எம்.பி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி ஒன்றுகூடல் மற்றும் ஊர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொற்றமுல்லை பகுதியில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஊர் முன்னேற்றம் மற்றும் அபிருத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்கான பல முன்மொழிவுகள் ஆராய்ப்பட்டன.

குறிப்பாக பாடசாலைக்கான மைதானம், சதொச விற்பனை நிலையம், பள்ளிவாசலுக்கான கட்டிடத்தை முழுமை படுத்துதல், தபால் நிலையம், 100 பேருக்கான சுயதொழில் உதவிகள், கிளினிக் நிலையம் போன்ற தேவைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டன.