பதுளை மண்சரிவு ; மீறியபெந்த தோட்டத்தைக் காணவில்லை (நான்காம் இணைப்பு)

ஹப்புத்தளை,  ஹல்துமுல்ல  மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.

எட்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் தற்போது மீட்கப்பட்டிருப்பதாகவும் 300 பேர் வரையில் காணாமற்போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 150 க்கு மேற்பட்ட வீடுகள்  நிர்மூலமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார்.   (U)