வவுனியா புதிய சாளம்பைக்குளம் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில், வவுனியா, புதிய சாளம்பைக்குளம் வீதியை கொங்ரீட் பாதையாக புனரமைப்பதற்கான  ஆரம்பகட்ட வேலைகளை,  அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான முத்து முஹம்மட் மற்றும் அப்துல் பாரி ஆகியோர் இன்று (24/ 11/ 2017) ஆரம்பித்து வைத்தனர்.