மண்டாடுகம பாடசாலை மைதானம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில், அநுராதபுரம், மண்டாடுகம முஸ்லிம் வித்தியாலய மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவு  செய்யப்பட்டது.

ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம், இஷாக் ரஹ்மான் எம்.பியினால் மாணவர்களின் பாவனைக்காக   கையளிக்கப்பட்டது.