Breaking
Mon. Dec 8th, 2025
எ.எச்.எம்.பூமுதீன்
மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின்( தேசிய உப்புக் கூட்டுத்தாபனம்) புதிய தலைவராக எம்.எம்.அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் இந் நியமனம் இன்று 30ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர்
மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் அமீன் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவரும் ஒருவராகும். அவருக்கு இன்று கிடைத்துள்ள இந்தப் பதவியை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
லாபத்தில் இயங்கி வரும் இக்கூட்டுத்தாபனத்தை மேலும் இலாபம் ஈட்டக் கூடிய நிறுவனமாக உயர்த்த வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் அவரை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
கூட்டுத்தாபனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அமீன் விடத்தல் தீவு – பெரியமடுவை பிறப்பிடமாகக் கொண்டவர். இந்த பிரதேச மக்களினதும் முழு வடபுல முஸ்லிம்களினதும் தியாகமும் உதவியுமே என்னை இன்று அமைச்சராக உருவாக்கியுள்ளது.
 அமைச்சராக இருந்து கொண்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். அகதியாக வெளியேறிய எனக்கு அடிமட்ட மக்களின் பிரச்சினைகள் நன்கு அறிவேன். மக்கள் பணியில் எல்லோரையும் திருப்திப் படுத்துவது என்பது முடியாத காரியம் தான் எனினும் உதவி கேட்டு வருபவர்களை ஒருபோதும்
இல்லை என்று கூறி திருப்பி அனுப்புவன் நான் அல்ல.
கூட்டுத்தாபனத்தின் பழைய தலைவரான சஹாப்தீன் ஹாஜியாரின் அர்ப்பணிப்பான பணியை இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவு கூர்ந்து இந்தக் கூட்டுத்தாபனத்தை எவ்வாறு இலாபகரமாக உருவாக்கினாரோ, அதேபோன்று அவரது ஆலோசனைகளையும் பெற்று சிறந்த முறையில் கூட்டுத்தாபனத்தை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
7M8A2670 7M8A2660- 7M8A2657- 7M8A2656- 7M8A2652 7M8A2650 7M8A2651

Related Post