ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு!

ஒட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் இல்லத்தில் நேற்று (03) இடம்பெற்றது.

பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள்  தொடர்பில் இதன்போது  கலந்தாலோசிக்கப்பட்டது. பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.