பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தினருடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

பாகிஸ்தான் நாட்டின் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் உயர் அதிகாரிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (12)  அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் ரிஸ்வான் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.